ETV Bharat / state

2024 புத்தாண்டு கொண்டாட்டம்: தஞ்சை ஒப்பிலியப்பன் கோயிலில் குவியும் பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!

தஞ்சை ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வேங்கடாசலபதி சாமி கோயிலில், 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் மூலவர் வேங்கடாசலபதியை அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

Devotees darshan at oppiliappan temple
ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 9:50 AM IST

தஞ்சாவூர்: தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வேங்கடாசலபதி சாமி கோயிலில், இன்று (ஜன.01) 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் மூலவர் வேங்கடாசலபதி சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் சிறப்புடைய தலமாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் விளங்குவது கும்பகோணம் அருகேயுள்ள திருவிண்ணகர் என போற்றப்படும், ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சாமி கோயிலாகும். இத்தலத்தை பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர்.

திருப்பதி வேங்கடாஜலபதி சாமியைப் போன்றே இத்தலத்து இறைவனும் வரப்பிரசாதியாக, வேங்கடாசலபதி என்ற திருபெயருடனும், புராணங்களில் ஸ்ரீனிவாசன் எனும் திருநாமம் கொண்டும், மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் உள்ளார்.

எப்போதுமே இங்கு பெருமாளுக்கு அனைத்து நிவேதனங்களும் உப்பு இன்றியே செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் இன்று 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 3.40 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்ரபாதத்திற்கு பிறகு 4 மணிக்கு விஷ்வரூப தரிசனமும் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

மூலவர் வெங்கடாசலபதி சாமி குளிர் காலத்திற்கு ஏற்ற வெல்வெட் அங்கியுடன் ராஜ அலங்காரத்திலும், உற்சவர் பெருமாள் பொன்னப்பர், ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு மலர் அலங்காரத்திலும் அருள் பாலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிறந்தது 2024 புத்தாண்டு.. வர்ண ஜாலங்களுடன் வரவேற்ற பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.