கடந்த 10 ஆண்டுகளாக காரைக்குடி-திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை பணிகள் நிறைவடைந்ததையடுத்து சில தினங்களாக ட்ராலி மூலமாக ஆய்வு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் ஆய்வு ரயில் மூலமாக அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பல வருடமாக நடைபெற்று வந்த பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்றதால் விரைவில் ரயிகள் இயக்கப்படும் என்ற நம்பிக்கையில் டெல்டா பகுதி மக்கள் உள்ளனர்.