ETV Bharat / state

Thanjavur: வண்ண வண்ண பொம்மைகளை வாங்குவதற்கு ஆள் இல்லை; வேதனையில் தொழிலாளர்கள்

தஞ்சாவூரில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான அலங்கார பொம்மைகள் சரியாக விற்பனையாகாததால் தொழிலாளர்கள் வேதனையடைந்து உள்ளனர்.

author img

By

Published : Jul 12, 2023, 12:25 PM IST

decorative toys made of cement in tanjore people are not interested to buy so workers are suffering
வண்ண வண்ண பொம்மைகளை வாங்குவதற்கு ஆள் இல்லை; வேதனையில் தொழிலாளர்கள்

தஞ்சாவூர்: பொதுமக்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அலங்கரிப்பது அழகிய வண்ண பொம்மைகள் தான். வீடுகளில் பொம்மைகள் இருந்தால் அந்த வீடு ரம்மியமாக காட்சி தரும். இத்தகைய பொம்மைகள் தற்போது நாகரிக உலகில் பிளாஸ்டிக், பீங்கான் ஆகிய பல்வேறு வகைகளில் பல்வேறு உருவங்களில் கிடைக்கிறது.

இதேபோல் சிமென்ட் மூலம் அழகிய தத்ரூபமான பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், முகப்புகள் ஆகியவை செய்யப்படுகின்றன. இந்நிலையில் நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ஜெகன், கவிதா மற்றும் 2 குழந்தைகள், அவரது உறவினர் என சிமென்ட் ஒர்க்ஸ் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து தஞ்சைக்குப் பிழைப்புக்காக வந்து சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர்.

தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் வாடகைக்கு இடம்பிடித்து, அங்கேயே தங்கி சிமென்ட் பொம்மைகளை கடந்த 4 ஆண்டுகளாக செய்து, அதை விற்று குறைந்த அளவே வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாததால் இத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட அழகிய சிமென்டால் ஆன பொம்மைகளை செய்து காட்சிபடுத்தி பொதுமக்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இவர்கள் செய்து வைத்திருக்கும் பொம்மைகள் விற்பனையானால் மட்டுமே இவர்களுக்கு வருமானம் கிடைக்கும். பொதுமக்களின் கலை ஆர்வத்தை நம்பியே இவர்களது தொழில் உள்ளது. விலங்குகள், பறவைகள், தலைவர்களின் சிலைகள், தண்ணீர் தொட்டிகள், சுவாமி சிலைகள், டைனோசர் பொம்மைகள், வீட்டு முகப்பு அலங்காரப் பொருட்கள், பூ தொட்டிகள், துளசி மாடம், திருஷ்டி பொம்மைகள், சிமென்டாலான மரம், கிணறு உறைகள், ஆகியவைகளை இவர்கள் சிமென்ட், ஜல்லி, கம்பி, மற்றும் மணல் கொண்டு உருவாக்குகின்றனர்.

இது குறித்து சிமென்ட் ஒர்க்ஸ் செய்யும் கூலித் தொழிலாளி கவிதா கூறும்போது, ''வாடகைக்கு இடம் பிடித்து தான் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். தற்போது பொதுமக்கள் இந்த சிமென்ட் பொம்மைகளை விரும்புவதில்லை. நாகரிகத்துக்கு ஏற்ப பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த பொம்மைகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியவை, பொம்மைகள் அதிக பாரமாக இருப்பதால் இவற்றை வெளியில் கொண்டு சென்று விற்க முடியாது.

சுமார் 500க்கும் மேற்பட்ட சிமென்டால் ஆன அழகிய பொம்மைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.50 முதல் ரூ.6 ஆயிரம் வரை விலை உள்ள பொருட்கள் இங்கு உள்ளன. பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றால் மட்டுமே எங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

மேலும் மழைக்காலங்களில் இந்த பொருட்களை தயார் செய்ய முடியாது. இந்த தொழிலுக்கு கூலி ஆட்கள் வேலைக்கு வரத் தயாராக இருந்தாலும், இந்தப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதால் தொழிலாளர்களுக்கு கூலி வழங்க இயலாத நிலை உள்ளது. இந்த தொழிலை விட்டுவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குப் போக முடியாது, ஏனெனில் இங்கு செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு அங்கு செல்ல முடியாது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதிக்கல் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.