தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தக் கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத சூழலிற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சம்பா சாகுபடிக்காக ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள், கனமழையின் காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழையினால் உழவு செய்வதற்கும், நடவு நடுவதற்கும், நாற்றங்கால் நாற்று பறிப்பதற்கும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கனமழையினால் ஒரு பக்கத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியிலும், மறுபக்கத்தில் விவசாயிகள் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: நான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் இது இல்லை - கண்ணீர் வடிக்கும் கோவை மாணவர்