ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை! - காவல்துறை விசாரணை

தஞ்சாவூர்: முன்விரோதம் காரணமாக இளைஞரின் தலையை துண்டித்து அம்மன் கோயில் வாசலில் வைத்து சென்ற கொலையாளிகளால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Cruel murder of a youth due to prejudice

author img

By

Published : Mar 3, 2021, 7:09 AM IST

தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (19). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் (மார்ச்1) நள்ளிரவு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வரும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து, ரெட்டிபாளையம் புது ஆற்றங்கரை ரயில் தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்தக் கும்பல் மணிகண்டனை சரமாரியாக தாக்கி, கொலை செய்துள்ளனர். அதன்பின், மணிகண்டனின் தலையைத் துண்டித்து, உடலை தண்டவாளங்களுக்கு இடையிலும், தலையை அருகேவுள்ள அம்மன் கோயில் வாசலிலும் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்தப் பக்கம் சென்றவர்கள் கோயில் வாசலில் தலை மட்டும் இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலையும், தலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்துராமனுக்கும் மணிகண்டனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளதாகவும், இதனால் இக்கொலை நடந்து இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி; தம்பதி படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.