ETV Bharat / state

ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம் - சீரமைக்கப் பொதுமக்கள் வேண்டுகோள்!

author img

By

Published : Nov 8, 2019, 11:25 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் பகுதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் தேங்கி, ஆபத்தான நிலையில் பள்ளம் உருவாகியுள்ளதைச் சரி செய்வதற்குப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம்

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெருமாள் கோயில் தெரு அமைந்துள்ளது. அங்குக் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு ஏற்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியுள்ளது. இதைச் சரிசெய்வதற்குப் பலமுறை கோரிக்கை வைத்தும்; சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கின்றனர்.
அந்தக் குழாய் உடைப்பினால் வெளியேறும் நீர் சாலையில் தேங்கி நிற்பதால், இரண்டு இடங்களில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மிகுந்த ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீர் பெருக்கெடுத்து ஓடி, அப்பகுதி வணிக வளாகங்களுக்குள் புகுந்து சிரமத்தை உண்டாக்குகிறது.

ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம்

மேலும் நோய்ப் பரவும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சாலையில் ஆபத்தாக உள்ள மரணக்குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடித்து நூதன திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!

Intro:குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கியதால் சாலையில் மரணக்குழி - உயிர் பலி ஏற்படும் முன் உடனடி சீரமைக்க கோரிக்கை

Body:பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெருமாள் கோயில் தெரு. இது பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ளது .இந்த சாலையில் பெருமாள் கோயில் தெரு கீழ் ஆற்றங்கரை ரோட்டிலிருந்து பழைய ஹவுஸிங் யூனிட் செல்லும் சாலையில் முகப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வணிகர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. இது நாளடைவில் தொடர்ந்து குழநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி சாலையில் இரண்டு இடங்களில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு விட்டது. இதனால் இப்பகுதிக்கு வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மிகுந்த ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டது. மேலும் காலை மற்றும் இரவு நேரங்களில் இந்த குழாயில் தண்ணீர் வரும்பொழுது தண்ணீர் பெருக்கெடுத்து இப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு ள் புகுந்து விடுகிறது .இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்கவும், சாலையில் ஆபத்தாக உள்ள மரணக்குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.