தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்கடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது.
அந்தத் திருமணத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்த 2 பேர் கலந்துகொண்டதாக தெரியவந்தது. அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உடனே திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாதுகாப்பு கருதி சுகாதாரத் துறையினர் நடுக்கடையில் முகாம் போட்டு கரோனா பரிசோதனை செய்தனர். இதில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருவாய் துறை, ஊரகவளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை ஆகியோர் இணைந்து நடுக்கடை ஷாஜகான் தெரு, மைதீன்தெரு ஆகிய பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
பின்னர் நகராட்சி சார்பில் அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.