ETV Bharat / state

கரோனா எதிரொலி: மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்த கிராமம்! - corona virus affect

தஞ்சை: கரோனா வைரஸின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செந்தாலை பட்டினம் கிராம மக்கள் ஊருக்கு வெளியே தண்ணீர் தொட்டி அமைத்து, கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளைக் கழுவிய பின்னரே உள்ளே வரவேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.

corona-echo-the-village-has-imposed-new-conditions-for-the-people

author img

By

Published : Mar 17, 2020, 4:28 PM IST

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள செந்தாலை பட்டினம் என்ற மீனவர் கிராமமுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்தாலை பட்டினம் கிராமத்து மக்கள், தங்களை கரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று வரும் கிராம மக்கள் அனைவரும் ஊருக்குள் வரும் பொழுது ஊரின் எல்லையில் கைகளை சுத்தம் செய்து விட்டு வர வேண்டும் என்று எல்லையில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதன் அருகில் சோப்பு, கிருமி நாசினி மருந்துகள் ஆகியவற்றை வைத்துள்ளனர்.

மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்த கிராமம்

பொதுமக்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்னர் தங்களது கைகளை நன்கு கழுவி விட்டு வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களை கொரோனா வைரஸ் நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என இக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: விபத்து நடந்ததை நடித்துக் காட்டச்சொல்லி காவல் துறை வற்புறுத்தல்: உயர் நீதிமன்றத்தில் கமல் முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.