தமிழ்நாட்டில் இதுவரை ஏழு லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சையில் மட்டும் இதுவரை 15ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 285ஆகவும், அம்மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220ஆகவும் உள்ளது. நேற்று ஒரே நாளில் 95 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.