தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி அலுவலகத்தில், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, தலைவர்களின் படங்களில் அவர்களின் பெயர்கள் தான் காணப்படும். ஆனால், இங்கு தலைவர்களின் பெயர்களுக்குப் பதிலாக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரின் பெயர்களே அந்த இடத்தில் உள்ளன.
இது மதிப்புமிக்க தலைவர்களை அவமரியாதை செய்யும் செயல் என பலர் குற்றச்சாட்டி வருகின்றனர். அப்படங்களுக்கு கீழு உள்ள பெயர்கள் வருமாறு: அண்ணல் அம்பேத்கர் படத்தில் கீழ் செல்வராணி கல்யாணசுந்தரம், பெரியார் படத்தில் கீழ் தோ.அருளானந்தசாமி, பேரறிஞர் அண்ணா படத்தில் கீழ் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., கருணாநிதி படத்தில் கீழ் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., இதன் பின்னணியில், தலைவர்களின் படங்களுக்கு கீழுள்ளது அப்படங்களை வழங்கியவர்களின் பெயர் என கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!