ETV Bharat / state

ஒப்பந்த தொழிலாளர் விஷவாயு தாக்கி பலி!

தஞ்சாவூர் : பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்த தனியார் ஒப்பந்த தொழிலாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

contract workers poisoned
author img

By

Published : Nov 14, 2019, 11:34 PM IST

கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிக்காக தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் அடைப்பு இயந்திரமான காமி என்ற லாரி வரவழைக்கப்பட்டது. கழிவுநீர் அடைப்பு வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் ராஜா தலைமையில் வீரமணி, சாதிக் பாட்சா (55) உள்பட நான்கு பேர் கழிவுநீர் அடைப்பு எடுப்பதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர்.

அப்போது சாதிக் பாட்சா விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். உடன் இருந்தவர்கள் பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாக வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.

விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்

தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்சாவை அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:
நான் மீசை வைத்து பூணூல் போட்டால் பிராமணர் என ஏற்றுக்கொள்வார்களா - சீமான் !

Intro:தஞ்சாவூர் நவ 14

பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்த தனியார் ஒப்பந்த தொழிலாளர் விஷவாயு தாக்கி பலி Body:கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிக்கு தனியார் நிறுவனத்தில் சார்பில் பணி அமர்த்தப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் கழிவுநீர் அடைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் எதிரே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக தகவல் கொடுத்தனர்,
இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிக்காக தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவு நீர் அடைப்பு இயந்திரமான காமி என்ற லாரி வரவழைக்கப்பட்டது.
கழிவு நீர் அடைப்பு வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் ராஜா தலைமையில் வீரமணி மற்றும்
சாதிக்பாட்சா வயது 55 உள்பட 4 பேர் கழிவுநீர் அடப்பு எடுப்பதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர்.அப்போது சாதிக் பாட்சா விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார்.
இந்த நிலையில் பதட்டமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தனர் இதனால் பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாக வெளியே எடுக்காமல் முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் நகர்நல அலுவலர் பிரேமா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்
பாதாள சாக்கடையில் விழுந்த
சாதிக்பாட்சாவை தீயணைப்பு துறை அதிகாரிகள் தேடினர் சுமார் அரை மணி போராட்டத்திற்கு பிறகு சாதிக்பாட்சா உடலை இறந்த நிலையில் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அய்யாக்கண்ணு கூறியதாவது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பாதாள சாக்கடையில் இறங்கி கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது ஆனால் தனியார் ஒப்பந்தக்காரர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பாதாள சாக்கடையில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாதாள சாக்கடையில் பணியில் உயிரிழந்த சாதிக் பாட்சாக்கு ரூ 10 லட்சம் நிவாரண நிதி அளிக்க வேண்டும்

நகராட்சி நிர்வாகத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திர மனிதனான ரோபாட் பயன்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

தற்போது இது பயன்பாடு இல்லாமல் இருந்து வருவது வருந்தத்தக்கது இது போன்ற மனித உயிர் இழப்பு இல்லாமல் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.