ETV Bharat / state

ஹெலிகாப்டர் ப்ரதர்ஸ் மீது புகார் - kumbakonam

தஞ்சாவூர்: ஹெலிகாப்டர் ப்ரதர்ஸ் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

helicopter
helicopter
author img

By

Published : Jul 22, 2021, 12:25 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுக்கு பூர்விகம் திருவாரூர் மாவட்டம் மறையூராகும். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வைத்துள்ளதால், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.

இதில், கணேஷ் பா.ஜ.க., வர்த்தக பிரிவில் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர்.

ஆனால், கொரோனா காரணத்தை காட்டிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ், பணத்தை செலுத்தியவர்களிடம் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, கும்பகோணம் ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியினர், தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் கடந்த வாரம், கணேஷ்– சுவாமிநாதன் சுமார் 15 கோடிவரை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தனர்.

பைரோஜ் பானு கொடுத்த புகாரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கும்பகோணத்தில், 600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என போலீஸ் தரப்பில் விசாரணை ஒருபுறம் நடந்து வருகிறது.

இதையடுத்து பா.ஜ.க., தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், நேற்று வெளியிட்ட அறிக்கையில், கணேஷ் மீது சில புகார்கள் வருவதால், அவரை தஞ்சை வடக்கு மாவட்ட வார்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.