ETV Bharat / state

பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்!

author img

By

Published : Oct 8, 2020, 7:10 PM IST

40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கட்டி கொடுத்த வீடுகள், தற்போது இடியும் நிலையில் உள்ளதால் அதனை சரிசெய்யக்கோரி பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிபிஐ
சிபிஐ

தஞ்சாவூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூரில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பூதலூர் ஒன்றியம் முழுவதும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கட்டி கொடுத்து தற்போது இடியும் நிலையில் உள்ள வீடுகளை மறு கட்டமைப்பு செய்யவும், வீடற்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி அரசின் இலவசவீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமை தங்கினார்.

இதில், பூதலூர் ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கட்டி கொடுத்த மற்றும்,இடியும் நிலையில் உள்ள வீடுகளை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்,வீடற்ற அனைவருக்கும் அரசின் இலவசவீடு பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா பேரிடர் காலத்தை கணக்கில் கொண்டு100 நாள் வேலை திட்டத்தை 200 ஆக உயர்த்தி, சட்டக்கூலியான ரூ.256-யை முழுமையாக வழங்க வேண்டும்.

குடும்பத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அதேப்போல, இறந்த நபர்கள் வெளி ஊர்களில் உள்ள நபர்கள் பெயரில் வேலை பார்த்ததாக கூறி போலியான முறையில் ஆவணங்கள் தயார் செய்து அவர்கள் பெயரில் பணம் எடுத்து கொள்ளை அடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு செய்து முறைகேடுகளை தடுப்பதோடு, இதில் ஈடுபட்டவர்கள் மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட சட்ட விதிகளின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பல்பொருள் அங்காடியில் பாஜகவினர் சூறையாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.