சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கல்லணை கால்வாயில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கல்லணை ஆய்வு மாளிகையில் பொதுப்பணித்துறை, அரசு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என்.நேரு, நிர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காவலரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளி அக்ரஹாரம் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். அதன் பிறகு திருச்சி புலியூர் பகுதியில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
இதையும் படிங்க: ஹெல்மெட்டை கவ்விச் சென்ற காட்டு யானை - வைரலாகும் வீடியோ