தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 23 கணினிகள், 23 யூபிஎஸ், 2 பிரிண்டர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனை சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் பாலசுப்பிரமணியம், மேலான் இயக்குனர் பாலசுப்ரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் காந்தியிடம் வழங்கினார்கள்.
பின்னர் இது குறித்து சிட்டி வங்கியின் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், 2014 ஆண்டு முதல் 2019 வரை கல்வி, சுகாதாரம், மருத்துவம், நீர்நிலை ஆதாரங்கள் என சிட்டி யூனியன் வங்கி இதுவரை 52 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. அந்த வகையில், தற்போது ரூபாய் ஆறு லட்சம் மதிப்பில் கணினிகளை வழங்கியுள்ளோம்.
இதேபோல் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தருவோம் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை தாக்கல்..
!