தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில், அணை கட்ட முயற்சித்துவரும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவரும் மத்திய அரசைக் கண்டித்தும், இதுவரை காவிரி பிரச்சினை தொடர்பாக கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில், 200-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பெ. மணியரசன் பேசுகையில், “தமிழ்நாடு அரசு காவிரி காப்பு நாளென்று அறிவித்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டம், பேரணி நடத்த வேண்டும். அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களை இணைத்து கூட்டம் நடத்த வேண்டும்.
காவிரி ஆணையத்தில், மீண்டும் மீண்டும் மேகதாது அணை கட்ட அனுமதி கோரி, கர்நாடக அரசு தொடர்ந்து கோரிக்கைவைத்தால், தமிழ்நாடு அரசு நிரந்தரமாக அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும். வஞ்சகமாகச் செயல்படும் அதன் தலைவரை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை!