திருவையாறு ஒட்டியுள்ள கண்டியூர் அரசூர் திருப்பந்துருத்தி காட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட 6 கிராமங்களில் 100 ஏக்கர் விளை நிலத்தை கைப்பற்றி புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் 80 விவசாயிகளை திரட்டி தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை மீறி தகுந்த இடைவெளி இல்லாமல், அரசு விதிமுறையை கடைப்பிடிக்காமல் போராட்டம் நடத்தியுள்ளார்.
இதுசம்பந்தமாக திருவையாறு உதவி காவல் ஆய்வாளர் அப்பர் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு காவல் துறையினர் சுகுமாறன் உள்பட 80 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.