தஞ்சாவூர்: திருவையாறு அருகே விளைநிலங்களை அழித்து பைபாஸ் சாலை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கண்டியூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை எதிர்த்து, அவர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில், எருமையிடம் மனு கொடுத்தும், அதற்குக் குடை பிடித்தும் நூதன முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி சுகுமார் கூறுகையில், “விளைநிலங்களை அழித்து பைபாஸ் சாலை அமைப்பதற்குப் பதில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் அமைக்கலாம். எங்களது இத்தகைய வலியுறுத்தலுக்கு மத்திய மாநில அரசு செவி சாய்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கஞ்சா எளிதாக கிடைக்கிறது - சிவி சண்முகம் வேதனை!