தஞ்சை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பூதலூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அங்குள்ள விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர்.
அதேநேரத்தில் பூதலூர் அருகே விண்ணமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதால், அங்கு உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடனடியாக அனைத்து இடங்களிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டால்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பர் என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: