கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள காசாங்காடு கிராமத்தில் உள்ள சிறுவர்கள் கரோனா வைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வின்றி பொது இடங்களில் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக விலகளை கடை பிடிக்காமலும் கூட்டமாக விளையாடியுள்ளனர்.
மாநில அரசின் சார்பில் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க வந்த அரசு அலுவலர்கள் சிறுவர்களின் இந்த செயல்களைக் கண்டு, அவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு அளித்தும், கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் காணொலிகள் மூலம் விளக்கினர்.
இதையடுத்து, சிறுவர்கள் இனி தாங்கள் சமூக இடைவெளிகளை கடைபிடிப்பதாகவும் முகக் கவசங்கள் அணிந்து வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் உறுதியளித்தனர்.
இதையும் பார்க்க: கரோனா நிவாரணம் ரூ.48 ஆயிரம்: தேனி ஆட்சியரை நெகிழவைத்த விவசாயி!