தஞ்சாவூர்: கும்பகோணம் அரியத்திடல் கிராமத்தை சேர்ந்த முகமது ஆதில்(16) என்னும் சிறுவன் அருகில் உள்ள மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று(பிப்.28) வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்ட ஆதில், நரசிம்மபுரத்திலிருந்து வந்துகொண்டிருந்த பேருந்தில் ஓடும்போது ஏற முயற்சித்தான். அப்போது எதிர்பாராவிதமாக தடுமாறி சாலையில் தவறி விழுந்ததான்.
இதனால் சிறுவனுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் பேருந்து ஓட்டுநர் பயணிகளை கீழிறக்கிவிட்டு பேருந்திலேயே சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிறுவனின் உடல் அரசு தலைமை மருத்துவமனையில், உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்றதால் நேர்ந்த விபரீதம் - 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!