ETV Bharat / state

குரங்கு கடித்ததால் 10 தையல் போட்ட ஆட்டோ ஓட்டுநர்.. கும்பகோணத்தில் பரபரப்பு! - ஆட்டோ டிரைவரை கடித்து குதறிய குரங்கு

Monkey bit an auto driver: குரங்கு கடித்ததில் படுகாயமுற்ற ஆட்டோ ஓட்டுநர், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கும்பகோணத்தில் ஆட்டோ டிரைவரை கொடூரமாக கடித்து குதறிய குரங்கால் பரபரப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:09 PM IST

கும்பகோணத்தில் ஆட்டோ டிரைவரை கொடூரமாக கடித்து குதறிய குரங்கால் பரபரப்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம், பண்டாரவாடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபி (38). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில், பண்டாரவாடையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் பெரிய கடை வீதி பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது பயணிகள் அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்கச் சென்றதால், ஆட்டோவை நிறுத்தி வைத்து விட்டு, சற்று தூரத்தில் காத்திருந்தபோது, எதிர்பாராவிதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று, இவரது ஆட்டோவில் சென்று அமர்ந்துள்ளது. இதனால் அவர் குரங்கை விரட்டியபோது, ஆத்திரமுற்ற குரங்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் முகமது ரபியின் கை, தோள்பட்டை, முதுகு என பல இடங்களில் கடித்து காயப்படுத்தி உள்ளது.

இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவர், உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 10க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டப்பட்டுள்ள நிலையில், உள்நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கும்பகோணம் மாநகராட்சியின் முக்கிய பகுதியான பெரிய கடை வீதி மற்றும் உச்சி பிள்ளையார் கோயில் பகுதிகளில் தற்போது குரங்குகள் நடமாட்டம் காணப்படுவதால், குரங்குகளால் பொதுமக்களுக்கு ஆபத்துகள், சாலை விபத்துகள் ஏற்படும் முன்னர், மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை அச்சுறுத்தி காயப்படுத்தும் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் குண்டும் குழியுமான சாலைகள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.