ETV Bharat / state

Pongal: ஒரு கிலோ மல்லிகைப் பூ இவ்வளவு விலையா? மலைக்கும் மக்கள்! - Jasmine Perfume

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்கப்படுகிறது. மல்லிகை, முல்லைப் பூக்கள் கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

மல்லிகைப் பூ
மல்லிகைப் பூ
author img

By

Published : Jan 13, 2023, 6:40 PM IST

பொங்கல் எதிரொலி : பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

கும்பகோணம்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (ஜன.15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் சூரிய உதயத்திற்கு முன் எழும் குடும்பத்தினர் வீடுகளை தூய்மைப்படுத்தி, புத்தாடை அணிந்து புதுக்கோலம், புதுப்பானை கொண்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்பர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் குலை, பருத்திமார், பொங்கல் பானை உள்ளிட்டப் பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது. பல்வேறு ஊர்களில் 4 கோடி ரூபாய்க்கும் மேலாக ஆடுகள் சந்தைகளில் விற்று வருகின்றன. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பெருநகரங்களில் பணிபுரியும் ஐ.டி மற்றும் பிற பணி செய்பவர்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு அமர்க்களமாக காட்சி அளிக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூக்கள் விற்பனை களைகட்டத் தொடங்கி உள்ளது. வழக்கமாக விற்பனையாகும் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்டப் பூக்கள் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

சாதாரண நாட்களில் விற்கப்படும் விலையை விட திருவிழா காலங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லிகைப்பூவை தொடர்ந்து முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களும் விலை அதிகரித்து காணப்படுகின்றன.

கும்பகோணம் பூ மார்க்கெட்டில் வழக்கத்தை விட பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் கிலோவிற்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 2ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னீர் ரோஜா கிலோ ரூபாய் 350 ரூபாய்க்கும், ஊட்டி ரோஜா ரூபாய் 250 ரூபாய்க்கும், சம்மங்கி பூ 100 ரூபாய்க்கும், செவ்வந்தி 100, 120 மற்றும் 150 ரூபாய் என மூன்று ரகங்களாகவும் விற்பனையாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக பூக்களின் விலை அதிகரித்து காணப்படுவதால், விலையை கேட்ட வாடிக்கையாளர்கள் வெறும் கையுடன் செல்லும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. சில பொது மக்கள் கூடுதல் விலையாக இருந்தாலும் மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பூக்களை வாங்கிச் செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். பொது மக்களின் கூட்ட அலையால், கும்பகோணம் பூ மார்க்கெட் திணறி வருகிறது.

இதையும் படிங்க: Pongal Bonus: ஆவின் பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி பொங்கல் போனஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.