ETV Bharat / state

திருவையாறு அருகே வாய்த்தகராறு: கை விரலை கடித்து துப்பியவர் கைது - கைவிரலை காயப்படுத்தியவர் கைது

தஞ்சாவூர்: திருவையாறு அருகே நடந்த தகராறில் கை விரலை கடித்து துப்பியவர் கைது செய்யப்பட்டார்.

Argument near Thiruvaiyaru: Man arrested for biting his finger

author img

By

Published : Nov 6, 2020, 11:18 AM IST

திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டையைச் சேர்ந்த மூக்கையன் என்பவரின் மகன் மகாராஜன்(32). அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் சங்கர்(28). இவர்கள் இருவரும் வைத்தியநாதன்பேட்டையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்துவருகின்றனர்.

சம்பவத்தன்று சங்கர் குடிபோதையில் மகாராஜனின் மனைவி இலக்கியாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அதை இலக்கியா, தன் கணவர் மகாராஜனிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக மகாராஜன் சங்கரிடம் கேட்டபோது, வாய்த் தகராறு ஏற்பட்டு சங்கர் மகாராஜனின் கைவிரலை கடித்து காயப்படுத்திவிட்டார்.

காயப்படுத்தப்பட்ட விரல்
காயப்படுத்தப்பட்ட விரல்

மகாராஜன் தஞ்சை மருத்துவக்கல்லூயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மகாராஜன் கொடுத்தப் புகாரின்பேரில் மருவூர் உதவி ஆய்வாளர் முத்தழகன் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஒரு மாத குழந்தை உயிரிழப்பிற்கு மருத்துவமனை ஊழியர்கள் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.