ETV Bharat / state

அமெரிக்க பொறியாளர் வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை! - கொள்ளை

தஞ்சாவூர்: சுவாமிமலையில் உள்ள அமெரிக்க பொறியாளர் வீட்டில் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட 2 லட்சம் பணம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

theft
author img

By

Published : Sep 2, 2019, 12:31 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை, காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர் முத்தையா மகன் அருணாச்சலம்(30). இவரது மனைவி மீனாட்சி அருணாச்சலம் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அருணாச்சலம், சுவாமிமலையில் உள்ள தனது வீட்டை தனது மைத்துனரான மேல வீதியில் வசிக்கும் சிவகுமார் (28) என்பவரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்த வீட்டை சிவகுமார் தினசரி காலை, மாலை வந்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க பொறியாளர் அருணாச்சலம் வீட்டை நோட்டமிட்டு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த பீரோ உள்ளிட்டவற்றை உடைத்து பூஜைக்கு வைத்திருந்த வெள்ளி பொருட்கள், டிவி, கேஸ் அடுப்பு உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து வழக்கம்போல் வீட்டை பார்க்க வந்த சிவகுமார், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சுவாமிமலை காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, உதவி ஆய்வாளர் மோகன் உள்ளிட்டோர் அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Intro:தஞ்சாவூர் செப் 01

சுவாமிமலையில் அமெரிக்க பொறியாளர் வீட்டில் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட 2 லட்சம் பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைBody:தஞ்சாவூர் மாவட்டம்
சுவாமிமலை காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர் முத்தையா மகன் அருணாச்சலம் 30 இவரது மனைவி மீனாட்சி அருணாச்சலம் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அருணாச்சலம் சுவாமிமலையில் உள்ள தனது வீட்டை தனது மைத்துனர் மேல வீதியில் வசிக்கும் நெடுஞ்செழியன் மகன் சிவகுமார் வயது 28 என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். பூட்டிய வீட்டை சிவகுமார் தினசரி காலை, மாலை ,வந்து பார்த்துச் சென்று உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க பொறியாளர் அருணாச்சலம் வீட்டை மர்ம ஆசாமிகள் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளே இருந்த பீரோ உள்ளிட்ட வற்றை உடைத்து பீரோவில் இருந்த பூஜைக்கு வைத்திருந்த வெள்ளி பொருட்கள், டிவி, கேஸ் அடுப்பு ,உள்ளிட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர் . வழக்கம்போல் வீட்டை பார்க்க வந்த அமெரிக்க பொறியாளர் அருணாச்சலத்தின் மைத்துனர் சிவகுமார் வீடு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .புகாரின் பேரில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் நாகலட்சுமி, உதவி ஆய்வாளர் மோகன், மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து வீட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.