ETV Bharat / state

'வேளாண் மண்டலத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்' - வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமை கட்சி

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை மத்திய அரசின் அனுமதியோடு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

agriculture-zone-plan-should-be-excuted-bt-central-govt-approval-velmurugan
வேல்முருகன்
author img

By

Published : Feb 16, 2020, 10:15 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று வந்தது போன்று அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் பழனிசாமியும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், ஆளுநரை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி, நீட் தேர்வுகள் உள்ளிட்ட பிரச்னைகளின்போது மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் மட்டுமே எழுதியதாகவும், ஆனால் அதற்கு பலனில்லை என்று குற்றம்சாட்டினார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் ஒப்புதலோடு அதனைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு 35 முதல் 40 ரூபாய் வரை வசூல் செய்வது கண்டனத்துக்குரியது. வசூல் செய்வோர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'பட்ஜெட்டில் வேளாண் மண்டலம் குறித்த தெளிவு இல்லை' - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.