தஞ்சை சங்கீத மகாலில் மன்னர் சரபோஜியின் 243ஆவது பிறந்தநாள், நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைக்கண்ணு, ”பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, 72 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களால், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதனால்தான் தமிழ்நாடு அரசு உறுதியாக அதனை ஆதரிக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக அரசை பாராட்ட பிரதமருக்கு என்ன நிர்பந்தம்? - மு.க. ஸ்டாலின்