ETV Bharat / state

கடிதத்தை திருப்பி அனுப்பிய விவகாரம்: ஈ.பி.எஸ்.க்கு வைத்திலிங்கம் கண்டனம்... தனிக்கட்சி தொடங்க சவால்! - தமிழக தேர்தல் ஆணையம் கடிதம்

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை இரு முறை வாங்க மறுத்த அதிமுக ஈ.பி.எஸ் தரப்பினர் திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஓ.பி.எஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அதிமுகவில் ஈ.பி.எஸ் தரப்பு தொடர தகுதி இல்லை என விமர்சித்துள்ளார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
author img

By

Published : Jan 3, 2023, 4:01 PM IST

தேர்தல் ஆணைய கடிதம் திருப்பி அனுப்பிய விவகாரம்: ஈ.பி.எஸ்.க்கு வைத்திலிங்கம் கண்டனம்... தனிக்கட்சி தொடங்க சவால்..

தஞ்சாவூர்: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகரத்தை கிளப்பி வருகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுக் குழு மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அதிமுகவில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். என அணிகள் பிரிந்து தங்களுக்குள் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்து வருகின்றனர்.

ஈ.பி.எஸ். தரப்பை ஆதரிக்கும் விதமாக, ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்திற்கு இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து, மத்திய அரசு இரு அணிகளிடையே பிரச்னையை மேலும் பூதாகரமாக்கியது.

அதேநேரம், மத்திய அரசின் இரு வேறு துறைகளில் இருந்து ஈ.பி.எஸ்.க்கு இடைக்கால பொதுச்செயலாளர் என கடிதம் சென்ற நிலையில், மத்திய அரசே அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துவிட்டதாக தகவல் பரவியது. இந்நிகழ்வு ஓ.பி.எஸ். தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த முறை தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கடிதம் அனுப்பப்பட்டதும், ஓ.பி.எஸ். தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. நிர்வாகிகளிடையே ஓ.பி.எஸ். முறையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என மீண்டும் ஒரு கடிதம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்றது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி அணி அதிமுக நிர்வாகிகள், மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இப்போக்கு ஈ.பி.எஸ். தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆர்.வி.எம். ரிமோட் வாக்குப்பதிவு முறை கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதை ஈ.பி.எஸ். தரப்பு வாங்க மறுத்து மீண்டும் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூரில் அதிமுக ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அதிமுகவை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். துவக்கிய காலத்தில், அவர் கொண்டு வந்த சட்ட விதிகளின்படி தொண்டர்களால் மட்டுமே கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.

அந்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் மீற முடியாது. அதன் அடிப்படையில் 2021 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனுடைய பதவிக்காலம் 6 வருடங்கள். பொதுக் குழுவிற்கோ, செயற் குழுவிற்கோ அதை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.

ஈ.பி.எஸ். பொதுக் குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்துள்ளார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 2026ஆம் ஆண்டு வரை ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளர், ஈ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி, தமிழக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதை ஏற்றுக் கொள்ளக்கூடியது தான் சட்ட விதிகளின்படி சரியானது. அதை ஏற்காமல் ஈ.பி.எஸ். தரப்பு கடிதத்தை திருப்பி அனுப்பினால் அதிமுகவை விட்டு அவர்கள் வெளியே சென்று தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம். அதிமுகவில் இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை" என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை - டெல்லி இடையே கூடுதல் விமான சேவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.