ETV Bharat / state

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி மோசடி... லஞ்சம் வாங்கிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு - Helicopter Brothers Financial Fraud

தஞ்சையில் ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் இருந்து முறைகேடாகப் பணம் வசூலித்ததாக இரண்டு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி மோசடி
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி மோசடி
author img

By

Published : Jun 24, 2023, 10:44 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ், சாமிநாதன் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். முன்னாள் பாஜக பிரமுகர்களான இவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டித்தொகை தருவதாகக் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பி பொதுமக்கள் ஏராளமானோர் அவர்களது பணத்தை, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் ரூ.600 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட இருவர், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் புகார் செய்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், மோசடி செய்த சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளனர். இதனிடைய கடந்த 2021ஆம் ஆண்டு கணேஷ் என்பவர், அவரது தாயாரின் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.

அப்போது தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த சோமசுந்தரம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் இருந்த கணேஷிடம், பொதுமக்கள் கொடுத்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடி மற்றும் மற்ற முதலீட்டாளர்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி என மொத்தம் ரூ.6 கோடி லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர்.

அதனால் கணேஷ் முன்பணமாக ரூ.10 லட்சத்தை தனது ஊழியர் மூலமாக தஞ்சாவூரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இது மறைமுகமாக செய்யப்பட்டிருந்த நிலையிலும் இந்த தகவல் பொது மக்களின் பார்வைக்கு வந்தது. மேலும் அந்த இரு காவல்துறையினர் லஞ்சம் வாங்கிய விவகாரம் குறித்து, தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு புகார்கள் சென்றன.

இதனைத் தொடர்ந்து சோமசுந்தரம் , கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினரின் இந்தச் சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'கணவன் சம்பாதிக்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது' - உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.