சென்னை: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்களாக ஏழு பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தட்டச்சுத்தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று சமர்ப்பித்து, பதவி உயர்வு வாங்கியுள்ளனர். இந்த சான்றிதழ்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் ஆய்வு செய்தபோது ஏழு பேரும் போலியாக சான்று பெற்றுள்ளது தெரியவந்தது.
இதற்கு உதவிய தனியார் தட்டச்சு பயிற்சிப்பள்ளி நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியர்கள் ஏழு பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்; தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இது தவிர மேலும் பலர் போலிச்சான்று சமர்ப்பித்து அரசுப்பணிகளில் தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தாயும் மகளும் நடத்திய போலி நிறுவனம் - வழியனுப்ப சென்றபோது அதிரடியாக கைது