தஞ்சையில் உள்ள சுத்திபட்டு எனும் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், கிடாவெட்டு நடந்துள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சீனிவாசன் மகன் கபிலன்(25) மற்றும் அவரது நண்பர்கள் பிரகதீஸ்வரன்(26), ராஜவர்மன்(29), மோகன்(20), அருளரசன்(33), ராஜா(18), விவேக்(28) உள்ளிட்ட 8 பேரும் மதியம் கிடா விருந்தில் உணவருந்திவிட்டு மீண்டும் மன்னார்குடிக்கு பிரகதீஸ்வரனின் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
வழியில் சடையார்கோவில் சாலையில் கார் வளைவில் திரும்பிய போது அதன் கட்டுபாட்டை இழந்து, பனைமரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலே கபிலன், பிரகதீஸ்வரன், மோகன் ஆகியோர் பலியாயினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த ராஜா, அருளரசன்,ராஜவர்மன்,விவேக் ஆகிய நான்கு பேரையும் மீட்டு தஞ்சை மருத்துகல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் எஸ்.பி மகேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி ரவிசந்திரன், வல்லம் டிஎஸ்பி சீத்தராமன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலுாக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, அனைவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.