ETV Bharat / state

ஆடுதுறை பேரூராட்சியில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:57 PM IST

Aaduthurai Temporary Bus Stand: கும்பகோணத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன போருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

ஆடுதுறை பேரூராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம்

தஞ்சாவூர்: கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள மிகப் பழமையான பேருந்து நிலையத்தை அதி நவீன பேருந்து நிலையமாக மாற்றி அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பணிகள் தொடங்கிய நிலையில், இன்று (செப் 28) பயணிகளின் உபயோகத்திற்காக தற்காலிக போருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக அரசால் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இப்புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக அதே சாலையில் 100 மீட்டர் தொலைவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்விளக்கு, குடிநீர், கழிவறை மற்றும் நிழற்குடை வசதியுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் தொகுதி எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் தலைமையிலும், பேரூராட்சி மன்றத் தலைவர் ம க ஸ்டாலின் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தை மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் மற்றும் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதையும் படிங்க: "இன்னைக்கு ஒரு புடி" - ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா! மழை வேண்டி விடிய விடிய நடந்த கறி விருந்து!

தொடர்ந்து தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்திச் செல்லப்பட்டது, அப்பபோது, ஆடுதுறை தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பெருந்தலைவர் மயில்வாகனன், ஆடுதுறை பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத், பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், புதிய பேருந்து நிலையம் முழுமை பெற்று திறக்கும் வரை இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: MS Swaminathan: இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.