ETV Bharat / state

தஞ்சை கலெக்டர் ஆபிஸ் முன் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு; எம்எல்ஏ கைது - தர்ணா போராட்டம்

சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை சுமார் ரூ.100 கோடியை வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்கக்கோரி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

author img

By

Published : Dec 21, 2022, 3:08 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

தஞ்சை: கும்பகோணம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை சுமார் 100 கோடி ரூபாயை வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; மேலும் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் சிபிஎம் கட்சி எம்எல்ஏ சின்னதுரை உள்ளிட்ட ஏராளமான கரும்பு விவசாயிகள் கரும்பு தோகைகளுடன் கண்டன முழக்கங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து தடுப்பு பேரிகார்டுகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்திருந்தனர். இதனை விவசாயிகள் தள்ளிக்கொண்டு சென்றதால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களுக்கு மேலாக திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யோகா விழிப்புணர்வுக்காக 3 ஆண்டு பயணம்.. தஞ்சை வந்த மைசூரு இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.