இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் மகள் (16). இவரைக் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி காணவில்லை என்று குமார் மனைவி கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிளையத்தில் புகார் செய்தார். இதில் காணாமல்போனவர் 16 வயது என்பதாலும், அவர் திருக்காட்டுப்பள்ளி தனியார் உதவிபெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடிவந்தனர். இந்நிலையில் உடுமலைப்பேட்டையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் பெண்ணின் உறவினர்கள் அந்தப் பெண்ணையும், அவரை அழைத்துச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த காலனி தெரு ராதாகிருஷ்ணன் மகன் ராகுல் (21) ஆகிய இருவரையும் அழைத்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி ராகுலை போக்சோ சட்டத்தில் கைதுசெய்ததுடன், அப்பெண்ணை அவரது தாயுடன் செல்ல சம்மதித்ததால் அவர்களிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.