தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் புதுசெட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பன்னீர்செல்வம் அப்பகுதியில் உள்ள நகை பட்டறையில் பணிபுரிந்துவந்தார்.
இவர் நேற்று குளிப்பதற்காக அப்பகுதியிலுள்ள ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்யத்தொடங்கியது. ஏரியில் இறங்கியபோது அவர் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பன்னீர்செல்வம் இறந்துகிடந்த செய்தியை குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். மேலும், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு!