தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அதையடுத்து, தஞ்சை 'ரஜினி மக்கள் மன்றம்' சார்பில் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்த நாள் வருவதை ஒட்டி, அவரது ரசிகர்கள் 700 பேர் தங்கள் உடல் உறுப்புகளையும், கண்களையும் தானம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த விழாவில் பேசிய தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், "தானும் ஒரு ரஜினி ரசிகர் எனக் கூறி அவருடைய கண்களை தானம் செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இறந்த பிறகு வீணாகும் நம்முடைய உடலை பிறருக்கு வாழ்வளிக்கும் வகையில் அனைவரும் வழங்க முன் வரவேண்டும். அதிக அளவில் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவை தேவைப்படுகின்றது. ஒருவர் உயிரிழந்த பிறகு ஐந்து நபர்களுக்கு உயிர் கொடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும் தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைவர் ரஜினிகணேசன், 700 நபர்களுக்கான ஒப்பந்த நகலை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.
மேலும் படிக்க: காவல்துறையினரின் அயராத உழைப்பு... இணை ஆணையர் புகழாரம்