தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிகின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் சென்று விபத்து ஏற்படுத்துகிறது. தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை நாய் துரத்துவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாலைகளில் நடந்து செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது. இந்த நிலையில் இன்று(டிச.26) ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் தொடை மற்றும் கால் பகுதிகளில் கடித்துள்ளது. அனைவரும் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வெளியில் வர அஞ்சி வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதுவரை 57 பேரை வெறிநாய்கள் கடித்துள்ளது. நகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து செல்ல பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: Thirunallar : பக்தர்கள் - யாசகர்கள் - வியாபாரிகள் - மீண்டும் பக்தர்கள்: ரிப்பீட்டு முறையில் சப்ளை ஆகும் கெட்டுப்போன உணவு