தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1,161 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதையடுத்து நேற்று (ஜூலை) ஒரே நாளில் 34 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், ஒரே நாளில் 21 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் தற்போது வரை 661 பேர் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கும்பகோணம் கொலை வழக்கு: 4 மாதங்களுக்கு பிறகு கொலையாளிகள் கைது!