தஞ்சாவூரில் நெல் அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், அங்கு வெளிமாவட்ட நெல் விற்பனையை கொள்முதல் பணியாளர்களின் துணையோடு நடைபெறுகிறதை விவசாயிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்
இந்நிலையில், ஊமத்தநாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நெல் மூட்டைகளை விற்பனை செய்ய லாரியில் நெல் கொண்டுவரப்படுவதை அறிந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் ஜெயலட்சுமி ஊமத்தநாடு நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 259 வெளிமாவட்ட நெல் மூட்டைகளும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ரத்தினம் (45), வாகன ஓட்டுனர் முனியன் (47) ஆகிய இருவரையும் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது' - ட்வீட் செய்த இவாங்கா ட்ரம்ப்