ETV Bharat / state

Saree Walkathon: தஞ்சையில் 2000 பெண்கள் பங்கேற்ற புடவை நடை பயண போட்டி! - தஞ்சை பெரிய கோயில்

தஞ்சையில் நடைபெற்ற மகளிருக்கான புடவையில் ஓர் நடை பயண போட்டியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புடவையில் ஓர் நடை பயண போட்டி
புடவையில் ஓர் நடை பயண போட்டி
author img

By

Published : Feb 18, 2023, 11:20 AM IST

புடவையில் ஓர் நடை பயண போட்டி

தஞ்சாவூர்: பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாகத் தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் தமிழகத்தில் முதன் முறையாகப் புடவையில் ஓர் நடை பயணம் என்ற போட்டி தஞ்சை பெரிய கோயில் முன்பு நடைபெற்றது. இந்தப் போட்டி இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்டது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டி 18 முதல் 35 வயது வரை உள்ள மகளிர்க்கு 4 கிலோ மீட்டர், 36 முதல் 59 வயது வரை உள்ள மகளிர்க்கு 3 கிலோமீட்டர், 60 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கிலோ மீட்டர் என வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மகளிர் அனைவரும் பாரம்பரிய புடவை அணிந்து கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

18 - 35 பிரிவில் ஸ்ரீநிதி என்ற கல்லூரி மாணவி, 36 - 59 பிரிவில் குழந்தையம்மாள், 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் செல்வி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு ரொக்க பரிசினையும் சான்றிதழ்களையும் மேயர் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வழங்கினர்.

இதையும் படிங்க: துணி கொடுத்தீங்க.. தையக் கூலி எங்க.? - அரசு பேருந்து ஓட்டுநர் நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.