தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பள்ளியில் மாவட்ட நிர்வாகம், இந்திய மருத்தவக் கழகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மாவட்ட கரோனா பணிகள் கண்காணிப்பு அலுவலர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்பட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், தனியார் நிதி நிறுவனம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் , " சென்னை உள்பட பிற மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் வந்துள்ள ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அலுவலர் சண்முகம், "மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதாகவும், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து தஞ்சை வந்த 24 பேர் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 359 பேர்!