தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் 8 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 890 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றால் நேற்று முன்தினம்வரை சிகிச்சைப் பலனின்றி 130 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று புதிதாக 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 111 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.