தென்காசி அருகே கடையநல்லூர் பகுதியில் உள்ள மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த ரகு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(24) என்பவருக்கும்; அவரது உறவுக்கார பெண்ணான தேன்மொழி என்ற பிரவீனா (21) என்பவருக்கும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கணவர் ரகு, இரண்டு தினங்களுக்கு முன்னர் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், மனைவி தேன்மொழி முன்னாள் காதலனுடன் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அதன் பின்னர் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், பெண்ணின் உறவினர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். மேலும் திருமணமான புதுப்பெண் கணவர் வெளிநாடு சென்ற மறுதினம் முன்னாள் காதலனுடன் மாயமான சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கிய வழக்கறிஞர்கள்- பீர் பாட்டிலால் தாக்கிய காதலன்