தென்காசி: சொக்கம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்துள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களாக அங்குள்ள வாழை மற்றும் தென்னந்தோப்பில் காட்டு யானை இரண்டு குட்டிகளுடன் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தென்னை, வாழைகள் சேதமாகின.
அப்பகுதி விவசாயிகள் யானைகளை விரட்டக்கோரி வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்தில் வனவர் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... உண்மை காரணத்தை மறைக்க முயற்சிக்கிறதா வனத்துறை?