தென்காசி: இந்திய தேசிய அளவிலான 2021-22ஆம் ஆண்டின் 11ஆவது மற்றும் 12ஆவது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியானது, மகாராஷ்டிரா மாநிலம், ரெய்காட் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கு பெற்ற தமிழ்நாட்டு அணி சார்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான,
1) ரா.பிரித்திவ் லிங் U-10 ஆண்கள்
2) கோ.ஸ்ரீ ஹரிணி U-10 பெண்கள்
3) மூ.விஷ்ணுவர்த்தினி U-17 பெண்கள்
4) ப.குகன் ஆனந்த் U-19 ஆண்கள்
ஆகிய நான்கு பேரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.
1) மு.பிரயுதா U-10 பெண்கள்
2) க.கமலேசன் U17 ஆண்கள் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.
இதன் மூலம், அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தனர். இந்த மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் மேற்கண்ட பிரிவுகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த மாணவி விஷ்ணுவர்தினி (U17) பதினேழு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான வில்வித்தைப் போட்டியில் 954 பேர்களுடன் போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாக வெற்றிப் பெற்று தங்கம் வென்று, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். தங்கம் வென்று தமிழ்நாடு திரும்பிய மாணவிக்கு புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பளித்தனர். அவரின் பெற்றோர்கள் இதைக் கொண்டாடும் விதமாக இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி- தமிழ்நாடு அரசு அரசாணை