ETV Bharat / state

மினி பஸ்ஸில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் காணொலி! - தென்காசி அண்மைச் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தனியார் மினி பஸ்ஸில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மினி பஸ்ஸில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

author img

By

Published : Oct 21, 2021, 3:44 PM IST

Updated : Oct 21, 2021, 5:19 PM IST

தென்காசி: தென்காசி ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர், மகேஸ்வரி. இவர் நேற்று (அக்.20) தனது மகளின் திருமணத்திற்காக வெளியூர் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு, தனியார் மினி பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் தனது பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக மகேஷ்வரி இருக்கையில் இருந்து எழுந்துள்ளார்.

வேகமாக சென்று வளைவில் பிரேக்

அப்போது ஏற்கனவே வேகமாக சென்று கொண்டிருந்த மினி பஸ், திடீரென வளைவில் வளைந்து பிரேக் அடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய மகேஸ்வரி, பேருந்தின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். விபத்தில் மகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து சக பயணிகள் மகேஸ்வரியை மீட்டு, குருவிகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மினி பஸ்ஸிலிருந்து தவறி விழும் பெண் தொடர்பான காணொலி

பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று (அக்.21) உயிரிழந்தார்.

விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மினி பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பதைபதைக்க செய்துள்ளது.

இதையும் படிங்க: தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மங்கிகேப் கொள்ளையன் கைது

Last Updated : Oct 21, 2021, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.