ETV Bharat / state

அடிப்படை வசதி செய்து தரும்வரை வாக்களிக்க மாட்டோம் - செங்கானூர் கிராம மக்கள் - மாவட்ட ஆட்சியர்

தென்காசி:  ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூருக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் வாக்கு சேகரிக்க கிராமத்திற்குள் யாரும் வரவேண்டாம் என்றும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

  அடிப்படை வசதி செஞ்சி தராம யாரும் ஓட்டு கேட்டு ஊருக்கு வராதிங்க- செங்கானூர் கிராம மக்கள்

author img

By

Published : Nov 2, 2020, 10:12 PM IST

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்டது செங்கானூர் கிராமம். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செங்கானூருக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில் பாதைக்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்குவதால் பாதையைக் கடப்பது சிரமமானதாக இருப்பதாகக் கூறி கடந்தாண்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தற்காலிகப் பாதை அமைத்து தரப்பட்டது.

தற்போது பெய்துவரும் பருவமழையால், சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்தவோ, தரமான தற்காலிக சாலை அமைக்கவோ இல்லை எனக் கிராம மக்கள் தொடர் குற்றசாட்டுகளை முன்வைத்துவந்தனர். இந்நிலையில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் வரையில் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்து கிராம எல்லையில் அப்பகுதி மக்கள் ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஊர் பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் கிராமத்திற்கு சாலை, குடிநீர், கழிவு நீரோடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கிராமத்திற்கு வரவேண்டாம். 2021இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவரும், முதலமைச்சரும் இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.