கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மீதமுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால், சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே இவர்கள் பொதுமக்களிடம் கையேந்தி தங்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்வார்கள். ஆனால் தற்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் ஆதரவற்றோர் உணவின்றி தவித்து வந்தனர்.
இதையடுத்து, தென்காசி பகுதிகளில் உணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது. மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், தென்காசி நகர் பகுதியில் ஆங்காங்கே இருந்த ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட அவர்கள், இளைஞர்களுக்கு மனமார நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண டோக்கன் பெற முண்டியடித்து வந்த மக்கள்!