தென்காசி: கொட்டாகுளம் பகுதியில் திருமணம் செய்யப்பட்டதாக கூறப்படும் வினித்-கிருத்திகா தம்பதியினரை பிரித்து, வடமாநிலத்தை சேர்ந்த கிருத்திகாவை அவரது பெற்றோர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது கிருத்திகா தான் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவரது உறவினர் ஒருவருடன் தனக்கு திருமணம் முடிந்து, தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், தான் எந்த விதமான அச்சுறுத்தலும் இன்றி திருமணம் முடித்து சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், என்னை வைத்து ஏதேனும் பிரச்சனை நடைபெற்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கிருத்திகாவை தேடி வரும் சூழலில், கிருத்திகா குஜராத்தில் மற்றொரு திருமணம் செய்து கொண்டு வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வழக்கறிஞர் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவால், மிகவும் பரபரப்பாக காணப்பட்ட இந்த வழக்கில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேருந்து படிக்கட்டு வழியே கீழே விழுந்த குழந்தை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!