தென்காசி: கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து ஐப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இதனால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். இப்படி சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்களிடம் போலியான கருங்காலி ருத்ராட்ச மாலை விற்கப்பட்டுகிறது. குறிப்பாக ஐயப்ப பக்தர்களை குறிவைத்து இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமைதி, மனிதநேயம் என பல்வேறு குணங்களில் திருப்பம்கண்ட மக்கள் தற்போது ஆன்மீகத்தில் கருங்காலி மாலையில் திருப்பம் கண்டுள்ளனர்.கருங்காலி மரத்தால் ஆன மாலை அல்லது ஏதேனும் பொருட்கள் உடன் இருந்தால் குறைகள் நீங்கி, மன நிம்மதி பெறலாம் என ஆன்மீக ரீதியாக நம்பிக்கை பெறத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் குற்றாலத்திற்கு வரும் ஐப்ப பக்தர்கள் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கருங்காலி மரத்தால் ஆன பொருட்கள் மற்றும் மாலையை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் கருங்காலி மரத்தின் மோகத்தை பயன்படுத்தி சிலர், ருத்ராட்ச மாலையை கருப்பாக மாற்றுவதற்கு சாயம் பூசப்பட்டு உண்மையான கருங்காலி மாலை என சந்தைகளில் போலி கருங்காலி பொருட்களை விற்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐப்ப பக்தர்களை குறிவைத்து கருங்காலி மாலை என ஏமாற்றி விற்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.
கருங்காலி மாலை என்றால் என்ன?: ருத்ராட்ச மாலை, துளசி மாலை வரிசையில் தற்போது மிக நுணுக்கமாக குறைந்த காலத்தில் அனைவரது மனதில் இருக்கக்கூடிய கருங்காலி மாலை பற்றி கேள்விப்பட்டதுண்டா? அப்படி கருங்காலி மாலைக்கு என்னதான் மவுசு.. மக்கள் மத்தியில் கருங்காலிக்கான இந்த ஆரவாரம் எதற்கு எனப் பார்க்கையில், கருங்காலி ஒரு பழைமையான மர வகையைச் சார்ந்தது. பல ஆண்டுகள் வைரம் பாய்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் கருமையாக இருக்கும்.
அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நமது தேவைக்கேற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மூலம் நமது முன்னோர்கள் உபயோகித்து இருந்து வந்துள்ளனர். நம்முன்னோர் காலத்தில் உலக்கைகளை கருங்காலி மரத்தில்தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
பழைமையான வீடுகளில் தூண்கள், உலக்கை, கதவில் இருந்து குறிப்பிட்ட சில உபயோகங்களை கருங்காலி மரத்தில் தயாரித்து உபயோகித்து வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து மந்திர உரு ஏற்றப்பட்ட கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட் போன்றவை ஒருவரது ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு ஏற்ப பூஜை செய்யப்பட்டு தற்போது சந்தையில் கிடைக்கப்பெறுகிறது.
கருங்காலி மரத்தின் நன்மைகள்: கருங்காலி மாலையை ஆண், பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிந்தால் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகலும்.கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட உடல் நோயை நீக்கும் தன்மை கொண்டது.
பாஸிட்டிவ் எனர்ஜி தரும் கருங்காலி: உடலில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தவும், ஒருவரது எண்ணங்கள் நேர்மறையானதாக இருக்கவும், குழந்தைகள் அவற்றைக் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு எந்தத் தீங்கு விளைவிக்காது என்பதனால் பெரிதளவில் மக்கள் தற்போது கருங்காலி பக்கம் அதிகளவில் நாட்டம் கொண்டு வருகின்றனர். இந்த நன்மைகள் மற்றும் பயன்களை கொண்டுள்ளதால் சிலர் கருங்காலி என பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்கு வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..! கோயில் நிர்வாகத்தினர் மீது தந்தை குற்றச்சாட்டு!